இலங்கை தமிழரசுக் கட்சியினரின் பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியினரின் "பன்னாட்டு மகளிர் நாள்" நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம்(10-03-2024)காலை 9.30 மணியளவில் புனித திரேசாள் மேய்ப்புப்பணி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மகளிர் தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியின் தலைவர் முறாளினி தினேஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மாவட்ட நீதிமன்ற சட்டவாளர் விஜயராணி சதீஸ்குமார் முதன்மை விருந்தினராக கலந்துக் கொள்ளவுள்ளார்.


அழைப்பு

மேலும் இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
புதியது பழையவை