மட்டக்களப்பு காத்தான்குடியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!காத்தான்குடியில் யுக்திய போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 735 போதைப்பொருள் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றில் போதைப்பொருள் லேகியம் எடுத்து வரப்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை