மட்டக்களப்பு திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியும்! அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும்!

உலகெங்கும் வாழும் இந்துக்களால் மஹாசிவராத்திரி விரதம் அனுஸ்ரிக்கப்படுகின்றது அந்தவகையில்


மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருப்பழுகாமம் சிவன்(கௌரி அம்பிகை) ஆலயத்தில் சிவராத்திரி விஷேட பூசை இடம் பெற்றன.

நேற்று(08-03-2024)இரவு  திருப்பழுகாமம் சிவன் அறநெறிப்பாடசாலையினால் ஒவ்ஒரு வருடமும் மஹா சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு அறநெறிப்பாடசாலையினால் கலை நிகழ்வுகளும் இடம் பெறுகின்றமை வழமையாகும்.

நிகழ்வின் போரதீவுப்பற்று பிரதேசசெயலக அபிவிருத்தி கலாச்சார உத்தியோகஸ்தர், அபிவிருத்திஉத்தியோகஸ்தர் ,பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் ஆலோசகர் இ.டேசிராணி,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆலய குருக்கள் ,முன்னால் போரதீவுப்பற்று  பிரதேசசபை உறுப்பினர் ஆலய நிருவாகசபையினர் கிராமப் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய கலை நிகழ்வில் பங்குபற்றிய   மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மஹாசிவராத்திரி பூசை நிகழ்வுகளில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டமையக் கானக்கூடியதாக இருந்தனர்.

புதியது பழையவை