இன்றைய வானிலை முன்னறிவிப்பு!மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.


முன்னெச்சரிக்கை

அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுகின்றமையால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதியது பழையவை