தமிழர் பகுதியில் - கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில் 8 மாத கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு!மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தாந்தாமலையில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் வீட்டின் அருகில் இருந்த பொதுக்கிணற்றிலிருந்து நேற்று (14-03-2024) வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்டவைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது தாயின் வயிற்றினுள் இருந்து இறந்த நிலையில் ஆண் சிசு வெளியில் எடுக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் இருவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த பெண் தாந்தாமலை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை