கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் சீரற்ற வானிலை நீடிப்பதால், நாளைய தினம் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக அறிவித்துள்ள கல்வி அமைச்சானது, குறித்த தகவல் பொய்யானது என்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், சீரற்ற வானிலைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை