இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த தரவுகளை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.


இந்தியாவிலிருந்து வருகை
இந்நிலையில், மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்தியாவிலிருந்து 27,274 சுற்றுலாப் பயணிகளும் மாலைத்தீவிலிருந்து 7,620 சுற்றுலாப் பயணிகளும் ஜெர்மனியிலிருந்து 6,938 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,935 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை