பரீட்சை மத்திய நிலையத்துக்கு சென்ற மாணவிகள் இருவர் மாயம்!கல்விப் பொதுத் தராதர சாதாரணத் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் பரீட்சை மத்திய நிலையத்துக்கு சென்றிருந்த பாடசாலை மாணவிகள் இருவர், வீட்டுக்குத் திரும்பவில்லை எனவும், குறித்த மாணவிகள் இருவரின் பாதுகாவலர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு மாணவிகளும் செவ்வாய்க்கிழமை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, பரீட்சை மத்தியநிலையத்துக்கு சென்றுள்ளனர். அதிலொரு மாணவி, பெற்றோருடன் பரீட்சை மத்திய நிலையத்துக்கு வந்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு மாணவிகளும் நண்பிகள் என்றும், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்துக்கு அண்மையில் இவ்விருவரும் நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்ததை பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் பலரும் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை