மட்டக்களப்பு 35ம் கிராமம் கண்ணபுரம், படலக்கல்லடி ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய மகா கும்பாபிஷேகம்-2024கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று 35ம் கிராமம் கண்ணபுரம், படலக்கல்லடி
அருள்மிகு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய புனராவர்த்தன பஞ்ச குண்ட பக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று (09-06-2024)ஆம் திகதி மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றனர்.


கிரியாரம்பம் (07-06-2024)ஆம் திகதி  வெள்ளிக்கிழமை இடம் பெற்றனர்.


நேற்று(08-06-2024)ஆம் திகதி  காலை 7.00 மணி முதல் விநாயகப் பெருமான்,ஸ்ரீ மஹா விஷ்ணு,லட்சுமி,மற்றும் நாகதம்பிரான்,வைரவர்,ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள்,முருகன் ஆகிய மூர்த்திகளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு மாலை 4.00 மணி வரை இடம் பெறவுள்ளது.

மங்களகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 27ம் நாள் இன்று  (09-06-2024) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை திருதியை திதியும், புனர்பூச நட்சத்திரமும் சித்த யோகமுமம். கூடிய 10 மணி 38 நிமிடம் முதல் 11மணி 26 நிமிடம் (110.38-11-261) வரையுள்ள சிம்மலக்கினம் கூடிய சுபமுகூர்த வேளையில் விநாயகர் துணையோடு ஸ்ரீ தேவி பூதேவி சமேதர ஸ்ரீ நாராயண பகவானுக்கும் ஏனைய மரிவார மூர்த்திகளுக்கும் நாராயண கோசத்துடன் குடமுழுக்காடல் பெரும்சாந்தி பெருவிழா இடம் பெற்றனர்.

கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து 11 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடை பெற்று 12ஆம் நாள் 1008சங்காபிஷேகமும் பாற்குடப் பவனியும் இடம் பெறும்.புதியது பழையவை