ஊடகவியலாளர் செ.பேரின்பராசா எழுதிய, ‘பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்’ எனும் நூல் வெளியீடுஅம்பாறை அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் செ.பேரின்பராசாவினால் தொகுக்கப்பட்ட ‘பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

அக்கரைப்பற்று தமிழ் சங்கத்தின் தலைவரும் ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளருமான வா.குணாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்துகொண்டார்.கௌரவ அதிதியாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனும், விசேட அதிதிகளாக, தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா, வைத்தியர் சித்திராதேவராஜன், ஓய்வுநிலை அதிபர் க.கோபாலபிள்ளை, தமிழ்சங்கத்தின் முன்னாள் தலைவர் க.ரத்தினவேல் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.


நூல் அறிமுகத்தை பிரதேச செயலாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இணைந்து செய்து வைத்ததுடன் நூலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியனிடம் இருந்து நூலின் பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.

நூலாளர் அக்கரைப்பாக்கியன் மற்றும் பிரதேசசெயலாளர் பாராளுமன்றமுன்னாள் உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
புதியது பழையவை