கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒன்டாரியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த இரண்டாம் திகதி அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் வேகமாக பயணித்த வாகனம் கொங்ரீட் தூணில் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற தமிழ் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் மோதியதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.