நாட்டின் பல பகுதிகளில் மின் தடை...!நாட்டில் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மின் தடை குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட காலி களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று கடும் மழை தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை