யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!கிண்ணியா குரங்குப்பாஞ்சான், வெல்லாங்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு(04-06-2024) வயல் காவலில் ஈடுபட்டிருந்த போது யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா - பூவரசந்தீவை சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை