மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (30-08-2024) அதிகாலை 5:00 மணியளவில் பஸ் துவிச்சக்கர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இரு வாகனங்களும் முன் பின்னாக பயணித்துக்கொண்டிருந்த வேளையில் முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டியை பின்னால் பயணித்துக்கொண்டிருந்த பஸ் மோதித்தள்ளியதிலே இந்த உயிர் சேதத்துடனான விபத்து சம்பவீத்திருக்கிறது.