ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிரதான விமானிக்கும் துணை விமானி பெண் விமானிக்கும் இடையில் நடந்த முரண்பாடு



கடந்த செப்-21 ஆம் திகதி Airbus-330 ரக விமானம் UL 607 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

கழிப்பறை இடைவேளையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதான விமானி (Captain;) பெண் துணை விமானியை (First Officer) விமானத்தின் விமானி அறை (cockpit.) வெளியே தள்ளி கதவினை பூட்டியுள்ளார். இதன்போது பயணிகள் மற்றும் பணியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிவில் போக்குவரத்து விதிகளின் படி விசாணைகள் இடம்பெறுவதுடன்; கப்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறைக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முதன்மையாக முன்னுரிமையளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை