அமைச்சு பதவிக்காக தமிழ்தேசிய அரசியல் உருவாகவில்லை..!



யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரன் 1978,யூன்05, ல் அமைச்சு பதவி கேட்டு நஞ்சருந்தி சாகவில்லை?

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கரும்புலி மில்லர் 1987,யூலை,05,ல் அமைச்சு பதவி கேட்டு தற்கொடை செய்யவில்லை?

மன்னார் மாலதி 1987,அக்டோபர்,10,ல் அமைச்சு பதவி கேட்டு இந்தியப்படையுடன் மோதி உயிர் நீக்கவில்லை?

யாழ்ப்பாணத்தில் தியாகி திலிபன் 1987, செப்டம்பர்,26, ல் அமைச்சுபதவி கேட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்கவில்லை..?

மட்டக்களப்பில் அன்னை பூபதி 1988, ஏப்ரல்,18, ல் அமைச்சுபதவி கேட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறக்கவில்லை..?

அமைச்சு பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 2004, தேர்தலில் தெரிவான 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் இவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்களா?

1. 2005, டிசம்பர்,25,ல் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம்,
2. 2006, நவம்பர்,10,ல் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் நடராசா ரவிராஜ்,
3. 2008,மார்ச்,06, ல் ஏ,9, வீதியில் கிளைமோர் வைத்து கொலை செய்யப்பட்ட மாமனிதர் கிட்டினன் சிவனேசன்.

இவர்கள் அமைச்சு பதவிகளை பெற்று உயிருடன் அல்லவா இருந்திருப்பார்கள்?

ஐம்பதாயிரம் மாவீரர்கள், மூன்று இலட்சம் தமிழ் மக்கள், அமைச்சு பதவிக்காகவா உயிர் நீத்தனர்?

விடுதலைக்காகவும், உரிமைக்காவும், சுதந்திரத்திற்காகவும், இணைந்த வடகிழக்கில் இணைப்பாட்சி(சமஷ்டி தீர்வு) வேண்டியும் கடந்த 1948, தொடக்கம் 2024, வரையும் பல உயிர் தியாகங்களை செய்த இனம் அதற்கான தீர்வு வரும்வரை அதுதான் எமது இலக்கு அதுதான் எமது கொள்கை அதுதான் எமது அரசியல் என்பதை காட்டி முன்கொண்டு செல்வதே தமிழ்த்தேசிய அரசியலாகும்.

அபிவிருத்தியும், அமைச்சு பதவிகளும் எனில் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் தேவையில்லை ஏதாவது ஒரு ஆழும் தரப்பு கட்சியை ஆதரித்து சலுகைகளையும், பதவிகளையும் பெறலாம்.
அதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவையில்லை..

அதற்காக இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தேவையில்லை..

பா.அரியநேத்திரன்-
01/11/2024
புதியது பழையவை