கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்



மாகாண பொது சேவை மற்றும் மத்திய அரசின் நிறுவனங்கள் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஒன்றினைந்து மற்றும் கூட்டுறவுடன் பணியாற்றுவதன் அவசியம் குறித்த கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (28-01-2025)ஆம் திகதி இடம் பெற்றன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும்  வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.   


இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  ஆர்.எம்.பி.எஸ்.  ரத்நாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மற்றும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திருகோணமலை மாவட்டப் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்வாகத்தினை இலகு படுத்தவே மாகாண அரசுக்கும் மத்திய அரசுக்கும் விடயதானங்கள் பிரித்து உருவாக்கப்பட்டுள்ளன எனவே இதன் காரணமாக வழங்கப்படும் சேவைகளை தாமதப்படுத்தவோ அல்லது சிக்கலாக்கவோ கூடாது என்று வந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மக்கள் முழு நாட்டிற்கும் வரி செலுத்துவதால், ஆளுநரும் பிரதி அமைச்சரும், நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வழங்குவதில் ஒருங்கிணைந்து, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்படுமாறு அறிவுறுத்தினர். 


தற்போது எதிர்நோக்கும்  பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் ஏதேனும் சிக்கல்கள் காரணமாக சேவைகளை வழங்குவதை மட்டுப்படுத்தவோ அல்லது நிறுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், சேவையை திறம்பட வழங்குவதற்கு பொருத்தமான தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதியது பழையவை