ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பாக சாட்சி வழங்க இலங்கை செல்ல உள்ளதாக ஆசாத் மௌலானா!


சுவிஸில் அரசியல் அகதியாக இருக்கும் ஆசாத் மௌலானா ஈஸ்ட்டர்  தாக்குதல் தொடர்பாக சாட்சி வழங்க இலங்கை செல்ல உள்ளதாக செய்திகள் வருகின்றன. 
அது முடியுமா ?

அரசியல் அகதி நிலை என்பது
அரசியல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அவர் பாதுகாப்பிற்காகத் தனி உரிமைகளை பெறுகிறார்.

அவரின் அரசியல் அகதி அந்தஸ்து பிரச்சினை , அத்தோடு முடிந்துவிடும், ஏனெனில் இலங்கை அரசு அவரைத் திரும்ப அழைக்கும் வாய்ப்பு இருக்கலாம்.

சுவிஸ் சட்டங்கள்

சுவிஸில் அரசியல் அகதிகளுக்கு தாய்நாட்டிற்குச் செல்லுதல் பெரும்பாலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அவர் இலங்கை செல்வாரானால், அவரது அகதி அந்தஸ்து சுவிஸில் ரத்து செய்யப்படலாம் .

சாட்சி வழங்குவதற்கான விருப்பங்கள்

நேரில் இலங்கை செல்ல முடியாவிட்டால், தூரத்திலிருந்து (வீடியோ கால், எழுத்து மூலம், சட்ட ஆலோசகர்கள் மூலமாக) சாட்சி வழங்கலாம்.

அவர் இலங்கை வருவதாக இருந்தால் அவரால் மீண்டும் சுவிஸில் அரசியல் அகதியாக தொடர்ந்து வாழ முடியாது. (இது சர்வதேச அகதி அந்தஸ்த்து வழிமுறையாகும்)

அகதி அந்தஸ்த்து கிடைப்பவர்கள் , அவரது நாட்டை தவிர வேறு எந்த நாட்டுக்கும் சென்று வரலாம்.

எனவே சிலரது கருத்துகள் சாத்தியமற்றவை.

அவர் இலங்கை செல்ல 2 வழிகள் உள்ளன.....

1. அவருக்கு சுவிஸின் குடியுரிமை 
அல்லது
2. அரசியல் அகதி அந்தஸ்த்தை கைவிட்டு Work Permit ஒன்றை பெற வேண்டும்.
புதியது பழையவை