மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட 35ஆம் கிராமம்,கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் மிகவும் வறுமைக்கோட்டுக்குள்ளான குடும்பத்தினரின் வீட்டை இன்று (22-07-2025) அதிகாலை காட்டு யானை அடித்து துவசம் செய்துள்ளன.
வீட்டில் உறங்கும் போது இன்று (22-07-2025) ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு காட்டு யானை வந்து துவசம் செய்துள்ளனர்.
வீட்டில் உள்ளவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
தென்னை பயிர்களையும் அழித்து சேதப்படுத்தி அருகில் உள்ள சிறு பற்றைக்காட்டுக்குள் யானை சென்றுள்ளனர்.
அண்மைக்காலமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் காரணமாக தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து செல்லக் கூடிய சூழ்நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.
காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தங்களையும் தங்களது உடைமைகளையும் பாதுகாக்குமாறு கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.