துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

கம்பஹா, பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று(19.08.2025) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேலியகொடை, ஞானரத்ன மாவத்தை பகுதிக்கு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரியும் 45 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை