மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் வாசிப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்திய மாணவர்கள்.!

மட்டக்களப்பு மாவட்டம்  போரதீவுப்பற்று பிரதேசசபையின்  பாலையடிவட்டை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்." எனும் தொனிப்பொருளில் வாசிப்பு பேரணியும்,போதைப் பொருளை ஒழிப்போம் எனும் விழிப்புணர்வு வீதி நாடகமும் நேற்று முன் (09.10.2025)ஆம்  நடைபெற்றுள்ளது.

மேற்படி வாசிப்பு பேரனியானது
மட்/பட்/மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் இருந்து நடை பவனியாக பாலையடிவட்டை பொதுநூலகத்துக்கு வருகை தந்து முன்பாக போதைப்பொருளை ஒழிப்போம் எனும் விழிப்புணர்வு  வீதியோர நாடகம் மாணவர்களினால் இடம் பெற்றன.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்காக குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வினை போரதீவுப்பற்று பிரதேசசபையின்  உபதவிசாளர், த.கயசீலன் செயலாளர் எஸ்.பகீரதன் மற்றும் விடயப் பொறுப்பதிகாரி உபஅதிபர் ஆசிரியர்கள்,நூலக சேவகர்கள்  மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
புதியது பழையவை