மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வடகீழ் பருவ காலநிலைக்குத் தயார்படுத்தல் தொடர்பான கூட்டமானது இன்று(15.10.2025) ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு போரதீவுப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது வடகீழ் பருவ காலநிலையின் போது ஏற்படும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பதிவிநிலை உத்தியோகத்தர்கள், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.