மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் கொட்டும் மழையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்.!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு மாவீரர்களின் சகோதரியான பூமணி என்பவரால் பொதுச் சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.

சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்க, 06.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது.
புதியது பழையவை