கண்டி, கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று (22.11.2025) காலை பெய்த கனமழை காரணமாக கடையின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடையில் இருந்த நான்கு பேர் காயமடைந்து மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால், பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.