தொழிற்சாலையொன்றில் தீ விபத்து.!

பாணந்துறை - ஹிரன பகுதியில் இன்று (24.11.2025) பகல் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
புதியது பழையவை