அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, வீடுகளை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும், வீட்டின் உடைமை குறித்து கருத்தில் கொள்ளாமல், அத்தியாவசிய வீட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 50,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (05.12.2025)நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார இதனைத் தெரிவித்தார்.
வானிலை பேரழிவு காரணமாக 5,165 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 55,747 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.