
மட்டக்களப்பு பெரிய கல்லாறு-2 சேர்ந்த கோபாலசிங்கம் அனோஜன் என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வீட்டில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர் .நேற்றிரவு 9.30மணியளவில் 2 வாகனங்களில் சென்றிருந்த பத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே குறித்த நபரின் இல்லத்தை தேடுதல் நடவடிக்கையில் அவரது புகைப்படங்கள் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச்சென்றுள்ளனர் .
கோபாலசிங்கம் அனோஜன் தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கம் செயற்பாட்டில் இடுபட்டார் எனும் தகவலின் அடிப்பையில் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றது. இவரின் உறவினர் ஒருவர் மாவீரர் என்பதும் இவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பை மீள் உருவாக்குகிறனர் என்ற போர்வையில் பல இளைஞர்களை கைது செய்கிற நடவடிக்கையினை புலனாய்வு துறையினர் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.இத்தகைய தேடுதல் கைதுகளால் முன்னாள் போராளிகளும் பொதுமக்களும் பெரிதும் அச்சமடைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.