மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தின் எல்லைக்கிராம பகுதியில் காட்டு யானைகளால் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வந்தன.
போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் மக்கள் செறிந்து வாழும் கிராமமான பெரியபோரதீவு கிராமத்தில் நேற்று முன்(11.12.2025)அதிகாலை 5.00மணிக்கு மட்/பட்/பெரியபோரதீவு பாரதி மகா வித்தியாலயத்தின் பாடசாலையின் சுற்றுமதிலின் இரண்டு இடங்களில் சேதம் ஏற்படுத்திவிட்டு காட்டுயானை சென்றதாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் முனைத்தீவு வட்டார உறுப்பினர் சுந்தரலிங்கம் சஞ்சீவன் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில்,கிராமஉத்தியோகத்தர்,பாடசாலை அதிபர், வெல்லாவெளி வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதாகவும் இங்குள்ள மக்களுக்கு பாதுகாப்புக்காக யானை வெடி வழங்கவேண்டும் என கூறினார்.