சீனாவில் இன்று (04.12.2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர்.
சீனாவின் கிர்கிஸ்தான் – ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.