மட்டக்களப்பு கரடியனாற்றில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு.!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில்  86  வயதுடைய விவசாயி   ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (04.12.2025) ஆம் திகதி அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான கொம்மாதுறை பிரதேசத்தைச்சேர்ந்த சின்னத்தம்பி கந்லிங்கம் என்பவரே மரணமடைந்தவரென
அடையாளங்காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை