மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச சபையும் பொது நூலகங்களும் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நேற்று(30.12.2025)ஆம் திகதி பி.ப 2மணிக்கு  தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவானது 
போரதீவுப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களின் ஒத்துழைப்புடன் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம் பெற்றன.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு  மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திமதி M.R.F றிப்கா சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் சோ.ரங்கநாதன்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன்,போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் சி.பகீரதன் ,மட்/பட் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் அ.ஜெயப்பிரதாபன்,பிரதம அதிதியாக,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பி.றொபட் சுரேஸ், 
கௌரவ அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வின் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள்,நூலகர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,கலந்துகொண்டனர்.

இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு  நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சிறந்த சிரேஷ்ட வாசகர்களும் விஷேடமாக கெளரவிக்கப்பட்டனர்.

இங்கு மாணவர்களினால்  கலை, கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றபட்டன.

மேலும், இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திமதி M.R.F றிப்கா அவர்களையும்,சிறப்பு அதிதிகளாக வருகை தந்த பிரதேசசெயலாளர்.சோ.ரங்கநாதன், அவர்களுக்கும் போரதீப்பற்று பிரதேசசபையினால்  நினைவு சின்னமும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை