மட்டக்களப்பின் முடிசூடா மன்னன் என போற்றப்படும் சொல்லின் செல்வர் அமரர் கலாநிதி செல்லையா இராசதுரை அவர்களின் நினைவஞ்சலி கூட்டமானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று (14.12.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற்றிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நாகலிங்கம் திரவியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக கட்சி கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டு. அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகை சுடர் ஏற்றுலுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதை தொடர்ந்து வரவேற்புரையை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான த.நிர்மலன் ஆற்றியிருந்ததுடன், தலைமையுரையை த.ம.பு கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களும். அஞ்சலி உரைகளை த.ம.பு கட்சியின் கல்வி, கலை, கலாசார செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ச.மணிசேகரன், பிரபல எழுத்தாளரும், எழுச்சி கவிஞருமான கலாபூசனம் இரா. தவராஜா, த.ம.பு கட்சியின் செயற்குழு உறுப்பினர் த.ஈஸ்வரராஜா, செயற்குழு உறுப்பினர் ஆ. ஜோர்ச்பிள்ளை, கட்சியின் அரசியல் ஆலோசகர் ஸ்டாலின் ஞானம், கட்சியின் பிரதிச் செயலாளரும் (இணைப்பாக்கம் ) பிரதேச சபை உறுப்பினருமான, யோ.சந்திரகுமார் ஆகியோரும் ஆற்றியிருந்தனர்.