குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு..!

மூதூர் - நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. 

இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதற்காக திணைக்கள ஊழியர்கள், படையினர், கடடைபறிச்சான், மூதூர் அம்மன்நகர், கங்குலேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள்  உட்பட 200க்கும் மேற்பட்டோர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது சீரமைக்கப்பட்ட பின்னர் மிக விரைவில் நீர் கொண்டு செல்லப்பட்டு  நீர் சுத்திகரிக்கப்பட்டு விரைவாக குடிநீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை