முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் உள்ள தண்ணீரூற்று, புளியடி நரசிங்கர் கோவிலில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதன்படி குறித்த கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இச் சம்பவம் கோவிலில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(13.01.2026) அதிகாலை 02.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.