இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொங்கல் விழா நிகழ்வு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் ஏற்பாட்டில், உப்புவெளி பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இன்று (24.01.2026)காலை 09.30 மணியளவில் இடம்பெற்றது.
விருந்தினர்களும் பொதுமக்களும் மேளத்தாளங்களுடன் மண்டபத்திற்கு அழைக்கப்பட்டதுடன் தொடர்ந்து நாதஸ்வரம், பாரம்பரிய நடனங்கள் மற்றும் தமிழர் பண்பாட்டைக் காட்சிப்படுத்தும் கலை கலாசார நிகழ்வுகள், அதிதிகள் உரை மற்றும் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.