ஆணுறைகள் தீர்ந்து போனதால் வீரர்கள் அவதி - மூன்று நாட்களில் 10,000 பொதிகள் காலி.!

இத்தாலியில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதால் எதிர்பாராத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக  இத்தாலிய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. 

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 ஆணுறை பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமக்குத் தேவையான விநியோகம் இல்லை என வீரர்கள் முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 300,000 ஆணுறைகள்

மூன்றே நாட்களில் இருப்பு முடிந்துவிட்டது. மேலதிக கையிருப்புகள் வரும் என உறுதியளித்துள்ளனர், ஆனால் அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது" என பெயர் குறிப்பிட விரும்பாத வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு இரண்டு வீதம் மொத்தம் 300,000 ஆணுறைகள் வழங்கப்பட்டன.

இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்
இன்ஸ்டாகிராம் காதல்; பெண்ணை கொன்று உடலை இரும்புப் பெட்டிக்குள் வைத்து வீசிய கொடூரம்

ஆனால், இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் 10,000 க்கும் குறைவான எண்ணிக்கையே ஒதுக்கப்பட்டிருந்தது.

இவ்வளவு அதிகப்படியான தேவை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்கத் தவறிய ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு, தற்போது மேலதிக விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புதியது பழையவை