மட்டக்களப்பில் லண்டன் தொழிலதிபர் நேசராசாவின் நிதியுதவியுடன் 30 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சை வழங்கும் செயற்திட்டம் (19.02.2026)ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

லண்டனில் வசிக்கும் கோவில் போரதீவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்  மார்க்கண்டு நேசராசா மற்றும் அவரது குடும்பத்தினரின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நண்பர்கள் வட்டம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் (Lions Club) ஆகியன இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இன்றைய தினம் (19.02.2026) விசேட கண் மருத்துவ நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்ட 30 நோயாளர்களுக்கு அதிநவீன முறையில் கண்புரை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டிலும்  மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினரின் நிதியுதவியுடன் 200-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்களின் அத்தியாவசியத் தேவையறிந்து தொடர்ச்சியாக இவ்வாறான சேவைகளை வழங்கி வரும் நேசராசா குடும்பத்தினருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த உன்னதமான சேவையினைப் பாராட்டி, மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் வட்டம், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் சிகிச்சையினால் பயனடைந்த பொதுமக்கள் அனைவரும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினருக்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
புதியது பழையவை