யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ். நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி (19.02.2026) யாழ். பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவியாக இந்த மாணவி இடம்பிடித்துள்ளார்.
மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம், சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற துறைகளில் விசேட சித்தி, மருத்துவ பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது ஆகிய தங்கப் பதக்கங்களை அபிராமிக்கு வழங்கப்பட்டது.