65,000 ற்கும் மேற்பட்ட தேனீக்களை தொடர்ச்சியாக 5 மணி 3 நிமிடங்கள் வரை
முகத்தில் இருக்க வைத்து சோழன் உலக சாதனை படைத்த திருநெல்வேலியைச் சேர்ந்த எசக்கிமுத்து.
இவர், தேனீக்கள் வளர்ப்பிலும் வணிகத்திலும் ஆய்விலும் பல முன்னைற்றகரமான செயல்களைச் செய்து வரும்
எசக்கிமுத்து என்ற இளைஞர், சோழன் உலக சாதனையை திருநெல்வேலி வள்ளியூரில் அமைந்துள்ள மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1400 மாணவிகள் மத்தியில் மேற்கொண்டார்.
இதன்போது 65,000 ற்கும் மேற்பட்ட இந்திய வகைத் தேனீக்களை தனது முகத்தில் பரவவிட்டு 5 மணி 3 நிமிடங்கள் வரை இந்த உலக சாதனையை உறுதி செய்தார்.
சோழன் உலக சாதனை படைத்த எசக்கிமுத்துவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை நடுவர்களினால் வழங்கி பாராட்டப்பட்டது.