அம்பாறை மாவட்ட செயலகத்தில் 78வது சுதந்திர தின நிகழ்வுகள்.!

"இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன்றைய தினம் (2026.02.04) அம்பாறை மாவட்ட செயலகத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தாக அபேவிக்ரம தலைமையிலும்  , மேலதிக அராசாங்க அதிபர் ஜொகராஜனின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ மற்றும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா ரத்னாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தினமான இன்றைய நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸவினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உயிர் நீத்தவர்களுக்காகவும் இராணுவ வீரர்களுக்காகவும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இலங்கை நாட்டின் சுதந்திரம் தொடர்பான தலைமை உரையினை அம்பாறை அரசாங்க அதிபர் சிந்திக்க அபே விக்கிரமா நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து அதிதிகளின் உரையும் இடம்பெற்றதுடன் பலன் தரும் மரக்கன்றும் நடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தலைமைபீட பொலிஸ் பொறுப்பதிகார, அம்பாறை மாவட்ட இராணுவ படைத்தளபதி, விஷேட அதிரடிப் படை தளபதி, உஹன விமானப்படைத் தளபதி, அக்கரைப்பற்று பிரதேச பொலிஸ்மா அதிபர், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலக பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், உதவியாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை