மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த 78 வது சுதந்திர தின கரிநாள் போராட்டத்தை பொலீசார் தடுத்து நிறுத்திய போது அதனை எதிர்த்து போராட்டத்தை கொண்டு செல்லாது பொலீசார் சொல்வதை போல் நடந்து கொள்ளுமாற் அனுரவின் முகவர்களாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததோடு போராட்டத்தை வேறு திசைக்கு திருப்பவும் முனைந்துள்ளனர்.
வழமையாக நடைபெற்ற சுதந்திர கரிநாள் போராட்டங்கள் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை சென்று நிறைவடையும் நிலையில் இம்முறை எந்த அரசிலும் இல்லாத அடக்குமுறையை பிரயோகித்து பொலீசார் போராட்டத்தை மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்தில் நிறுத்தி இருந்தனர்?
பொலீசாரின் தடையை உடைத்து கொண்டு காந்தி பூங்கா ஊடாக செல்ல போராட்ட காரர்கள் முற்பட்ட போது அதனை அனுரவின் முகவர்களாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அது மட்டும் இன்றி தமிழரசுக் கட்சியில் உள்ள தவிசாளர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலீசாரின் தடையை மீறி ஒரு போராட்டத்தை நடாத்த முடியாது நிலைதான் இன்று காணப்படுகிறது.
இதற்கு காரணம் யார்?
தமிழ் தேசியம் என்று கூறும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் இன்று அனுர அரசை எதிர்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?