குச்சவெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் (25.02.2026) ஆம் திகதி குச்சவெளி பிரதேச சபையிலும், புல்மோட்டை உப அலுவலகத்திலும் இடம்பெற்றது.
தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சபையின் எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகள் அனைத்திலும் சபையினால் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் மாத்திரமே மாட்டிறைச்சியை விற்பனை செய்யப்பட வேண்டும் என தவிசாளர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.
அத்தோடு இறைச்சிக்காக மாடு அறுப்பவர்கள் பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்
இதனை மீறி செயற்படும் கடை உரிமையாளர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதுடன், பினை பணமும் சபையால் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், வருமான வரி பரிசோதகர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் விபரம்.
தனி இறைச்சி 1kg - 2000 ரூபாவாகவும், முள்ளுடன் கலந்த இறைச்சி 1kg - 1600 ரூபாவாகவும் விற்பனை செய்யவேண்டும்.