இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.
தென் மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் 


நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில்  வடகிழக்குத் திசையில் இருந்து  அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை