இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட அவர் நாட்டின் முதலாவது பெண் கணக்காய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சபையின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய அவரின் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 4 தடவைகள் முன்மொழியப்பட்ட புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இவ்வாறான நிலையில் கடந்தவாரம் அரசியலமைப்பு பேரவை கூடிய போது கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது நபராக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த சமுதிகா ஜெயரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
புதியது பழையவை