ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு இடம்பெற்றுள்ளது.
இன்று(22.02.2026) சாவகச்சேரியின் நகரசபையின் பொண் விழா மண்டபத்தில் பேராளர் மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
இந்த மாநாட்டின் ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மக்கள விளக்கு ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் எதிர் கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.