​மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 'புதிர் வழங்கும்' நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது!


​
வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் பாரம்பரிய "புதிர் வழங்கும்" நிகழ்வு இன்று (22.02.2026) ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​
ஆலயத்தின் பாரம்பரிய வழக்கப்படி, அறுவடைக்காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த புனித நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
​
ஆண்டுதோறும் பெரும்போக நெல் அறுவடை நிறைவடைந்ததும், ஆலயத்திற்குச் சொந்தமான நெற்காணிகளில் விளையும் நெல்லையும், விவசாயிகள் தமது நேர்த்திக்காக வழங்கும் நெல்லையும் கொண்டு இந்த 'புதிர்' தயார் செய்யப்படுகிறது.

​விவசாயிகளால் வழங்கப்பட்ட நெல் மற்றும் ஆலய நெல் ஆகியவற்றை ஆலய நிருவாகத்தினர் நேர்த்தியாக பொதி செய்து, விசேட பூஜைகளின் பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர்.

​இந்த "புதிர் நெல்லை" பெற்றுச் சென்று தமது இல்லங்களில் அல்லது நெற்களஞ்சியங்களில் வைப்பதன் மூலம், அந்த ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி உணவும் செல்வமும் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

​விவசாயப் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் இணைக்கும் இந்த நிகழ்வானது, மட்டக்களப்பு மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.
புதியது பழையவை