உலர்ந்த நிலையில் வர்ணம் தீட்டப்பட்டு சட்டவிரோதமாக நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட ஒரு தொகை விலங்கு தோல்களுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். நேற்றைய தினம் (11.02.2026)சம்பவம் இடம்பெற்றுள்ளது. வர்த்தகர்களுக்கான விசேட வழித்தடனம் ஊடாக இந்த விலங்கு தோல்களை நாட்டிற்குள் எடுத்து வர சந்தேக நபர் முயற்சித்துள்ளார்.
பணப்பைகள் தயாரிப்பதற்கென முதலைத் தோல்கள், மலைப்பாம்புகள் மற்றும் மேலும் சில ஊர்வன விலங்குகளின் தோல்களும் இதில் அடங்குகின்றன.
இவ்வாறு 19 தோல் பகுதிகள் நிறம் தீட்டப்பட்டு எடுத்துவரப்பட்டுள்ளன. குறித்த நபர் வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான ஏனைய சட்டவிதிமுறைகளை மீறி இந்தத் தோல்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடைய குறித்த வர்த்தகர், தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவற்றை நாட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பயணப்பையில் அவற்றை மறைத்து வைத்துள்ளதுடன் அவை ஆடைகள் எனவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.