​பொலன்னறுவையில் கோர விபத்து.! கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

​பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு முன்னால் இன்று (28.02.2026)சனிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிள், அதே நேரத்தில் எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
​இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த உடனே அங்கிருந்தவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

​அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமையே இந்த விபத்திற்கு நேரடி காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வாகனங்களை செலுத்தும் போது போதிய விழிப்புணர்வு இன்றி பயணிப்பது இவ்வாறான விபத்துக்களுக்கு வழிவகுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

​வீதியில் பயணிக்கும் போது வேகத்தைக் குறைத்து, தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய வேகத்தில் வாகனங்களைச் செலுத்துவது அவசியமாகும். "வேகத்தை விடுத்து விவேகத்துடன்" வாகனங்களைச் செலுத்தினால் இது போன்ற தேவையற்ற விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

​சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை