பொதுமக்களுக்கான அறிவித்தல்.!


குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.

 கணினி அமைப்பு முறையை மீண்டும் சரிசெய்த உடனேயே இந்தச் சேவைகள் மீண்டும் செயற்படுத்தப்படும்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வருந்துவதோடு, கணினி அமைப்பு முறையை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பாக தங்களது புரிதலையும் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேலதிக தகவல்களை 1962 / 0112 101 500 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்
புதியது பழையவை