இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் (Exclusive Economic Zone) மற்றொரு ஈரான் கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கப்பலில் உள்ள சுமார் 300 குழந்தைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்காக, கப்பலை 24 மணிநேரத்திற்கு இலங்கையின் ஒரு துறைமுகத்தை அடைய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும், மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமான ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டும் அதேபோல தனது தேசத்துக்கும் பாதுகாப்பு தரும் முடிவை எடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது.